இத்தாலியிலிருந்து வருவோருக்கு எல்லைக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது ஸ்பெயின்

தீவிரமடையும் சட்டவிரோதக் குடியேற்றம்

இத்தாலியிலிருந்து வருவோருக்கு எல்லைக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது ஸ்பெயின்

1 mins read
18b0656c-ec16-43ca-b8bf-97c295ba4905
ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியுடாவில் உள்ள கடற்கரையில், நாள்தோறும் நூற்றுக்கணக்கான குடியேறிகள் உதவிப்பொருள்களைப் பெறுவதற்காகக் காத்திருக்கின்றனர். - படம்: கெட்டி இமேஜஸ்
Google News Preferred Icon

மட்ரிட்: சட்டவிரோதக் குடியேற்றம் தொடர்பான தூதரகப் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், இத்தாலியிலிருந்து வரும் விமானங்களிலும் கப்பல்களில் பயணிப்போருக்குத் தற்காலிக எல்லைக் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.  

ஸ்பெயின் உள்நாட்டு விவகார அமைச்சு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த எல்லைக் கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 8 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து, செப்டம்பர் 7 வரை நடைமுறையில் இருக்கும். 

இதன்படி, இத்தாலியிலிருந்து ஸ்பெயினுக்கு வரும் பயணிகளோடு, பிற நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களின் கடவுச்சீட்டுக் குடியுரிமையும் விசா ஆவணங்களும் தீவிரமாகச் சரிபார்க்கப்படும்.  

பதிலடி நடவடிக்கை

இத்தாலிய அரசு ஸ்பெயினிலிருந்து வரும் பயணிகளுக்கு ஏற்கெனவே விதித்த எல்லைக் கட்டுப்பாடுகளுக்குப் பதிலடியாகவே ஸ்பெயின் இந்த முடிவை எடுத்துள்ளது.  

கடந்த ஜூலை 30 ஆம் தேதி, மொரோக்கோவிலிருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியுடா எல்லைக்குள் ஏறக்குறைய 72,000 சட்டவிரோதக் குடியேறிகள் திடீரென நுழைந்தனர். 

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி இத்தாலி அதன் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியது.  

இத்தாலி சோதனைகளை நிறுத்தாவிட்டால், பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஸ்பெயின் எச்சரித்திருந்த நிலையில், தற்போது அதிகாரபூர்வமாக இந்நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமைக்குச் சவால்

இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான அரசாங்கம், பாதுகாப்பு பயங்கரவாத அபாயங்கள் இல்லை என்பதும், புதிய குடியேற்ற அலைகள் உருவாகவில்லை என்பதும் உறுதி செய்யப்படும்வரை கட்டுப்பாடுகளைத் தளர்த்தப் போவதில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது.  

குறிப்புச் சொற்கள்