மாதவிடாய் காலத்தில் விடுப்பு கொடுக்கும் சட்டத்தை இயற்றியது ஸ்பெயின்

மாதவிடாய் காலத்தில் விடுப்பு கொடுக்கும் சட்டத்தை இயற்றியது ஸ்பெயின்

1 mins read
3858477f-d560-4c56-8b5e-45c3e264f0eb
படம்: ஏஎஃப்பி -

ஸ்பெயின் நாடாளுமன்றம் நேற்று (பிப்ரவரி 16) மாதவிடாய் நேரத்தில்விடுப்பு கொடுக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது.

அதன்மூலம் மாதவிடாயால் தவிக்கும் பெண்களுக்கு இனி ஊதியத்துடன் விடுப்பு கிடைக்கும்.

ஐரோப்பிய நாடுகளில் முதல் நாடாக ஸ்பெயின் இந்த சட்டத்தை இயற்றியுள்ளது.

புதிய சட்டத்திற்கு 185 பேர் ஆதரவாகவும் 154 பேர் எதிராகவும் நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர்.

புதிய சட்டத்தால் ஸ்பெயின் அரசியல்வாதிகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

ஜப்பான், இந்தோனீசியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் மாதவிடாய்க்கு விடுப்பு கொடுக்கப்படுகிறது.