மட்ரிட்: பாலஸ்தீனத்தை தனிநாடாக ஸ்பெயின், அயர்லாந்து குடியரசு, நார்வே ஆகியவை அங்கீகரித்துள்ளன.
தனிநாடாக பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைக்கும் காஸாவுக்கும் இடையே இணைப்புப் பாதை இருக்க வேண்டும் என்றும் பாலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருசலம் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
1967க்குப் பிறகு எல்லை தொடர்பாக செய்யப்பட்ட மாற்றங்களை இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்களின் இணக்கம் இன்றி ஸ்பெயின் அங்கீகரிக்காது என்று திரு சாஞ்செஸ் தெரிவித்தார்.