ஜோகூர் மாநில அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு போனஸ்: முதல்வர்

ஜோகூர் மாநில அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு போனஸ்: முதல்வர்

படம்: த ஸ்டார்

19 Nov 2026 - 4:34 pm

2 mins read

இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் சிறப்புப் போனசாக இந்த ஆண்டு இரண்டரை மாத சம்பளத்தைக் கூடுதலாகப் பெறுவார்கள் என்று ஜோகூர் மாநில முதல்வர் ஒன் ஹஃபீஸ் காசி கூறுகிறார்.

மாநில அரசு ஊழியர்களுக்கும் ஜோகூர் அரசால் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார்.

வியாழக்கிழமை (நவம்பர் 19) மாநில சட்டமன்றத்தில் ஜோகூர் மாநில வரவுசெலவுத் திட்டம் 2027ஐத் தாக்கல் செய்தபோது, ​​“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாகவும், மாநிலத்தின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுக்கு முக்கிய உந்து சக்தியாகவும் இருக்கும் அனைத்து ஜோகூர் அரசு ஊழியர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“அவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டியவை.

“எனவே, இந்தச் சிறப்பு ஊக்கத்தொகையை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது டிசம்பர் மாத இறுதியில் வழங்கப்படும்,” என்று முதல்வர் அறிவித்தார்.

ஜோகூரில் பணியாற்றும் 145,648 மத்திய அரசு ஊழியர்களுக்கு, ‘பந்துவான் காசே ஜோகூர்’ எனும் மக்கள் நல, வாழ்வாதார நிதியுதவித் திட்டத்தின் கீழ், தலா 500 ரிங்கிட் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் திரு ஒன் ஹாபிஸ் தெரிவித்தார்.

“ஜோகூர் மாநிலம் கடைப்பிடிக்கும் ‘ஒட்டுமொத்த தேசமும் ஒன்றிணைந்த அணுகுமுறை’க்கு இணங்க, இங்கு பணியாற்றும் 145,648 மத்திய அரசு ஊழியர்களுக்கு மாநில அரசு தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

“அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்குவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இதற்காக மொத்தம் 72.82 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

மேலும், ‘பந்துவான் காசே ஜோகூர்’ திட்டத்தின் கீழ், 200 செய்தியாளர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்த ஊக்கத்தொகைக்காக மாநில அரசு 200,000 ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாகவும், இது டிசம்பர், 2027 பிப்ரவரி மாதங்களில் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்