தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல ஊழியர்களுக்கு சிறப்பு சம்பளம்

1 mins read
ea34c745-1a0b-4272-8bc1-ef27e7c5f624
திறன்மிக்க, தரமான ஊழியரணியை ஏற்படுத்துவதில் ஜோகூர் மாநிலம் அண்டைய சிங்கப்பூருடன் போட்டியை எதிர்கொள்வதாக மலேசிய துணைப் பிரதமர் அகமது ஸாஹித் ஹமிடி கூறியுள்ளார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் தொடர்புடைய சில குறிப்பிட்ட துறைகளின் வேலையில் சேரும் இளையர்களுக்கு சிறப்பு தொடக்கச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அந்தத் துறைகளின் பட்டதாரி இளையர்களுக்கு 5,000 ரிங்கிட், பட்டயம் முடித்தோருக்கு 4,000 ரிங்கிட் (S$1,200) தொடக்க சம்பளத்தை நிர்ணயித்துள்ள முதல் மலேசிய மாநிலம் ஜோகூர் என்று துணைப் பிரதமர் அகமது ஸாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.

புதிய ஜோகூர் திறனாளர் மேம்பாட்டு மன்றத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், மாநில இளையர்களுக்கு தொடக்கச் சம்பளம் வழங்கும் நடைமுறையில் அந்த மன்றம் முக்கியப் பங்கு வகிக்கும் என்றார்.

ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்காக 100,000 தரமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதை இந்த சிறப்பு சம்பள முறை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

“இதுவரை அதுபோன்ற 74,000 வேலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இன்னும் 52,000 பணியிடங்களை நிரப்ப வேண்டி உள்ளது. தரமான வேலைகளையும் அதிக சம்பளத்தையும் மக்கள் விரும்புவதையே இது உணர்த்துகிறது,” என்றார் திரு ஸாஹித்.

“திறன்மிக்க, தரமான ஊழியரணியை ஏற்படுத்துவதில் ஜோகூர் மாநிலம் அண்டைய சிங்கப்பூருடன் போட்டியை எதிர்கொள்கிறது.

“உதாரணமாக, உள்ளூர் நிறுவனம் 1,700 ரிங்கிட் ஊதியம் வழங்கும் வேலைக்கு சிங்கப்பூர் நிறுவனம் 1,500 சிங்கப்பூர் வெள்ளியை வழங்குகிறது. அது கிட்டத்தட்ட 5,000 ரிங்கிட்டுக்குச் சமம்,” என்று அவர் ஒப்பிட்டுப் பேசினார்.

குறிப்புச் சொற்கள்