கொழும்பு: இலங்கையை நவம்பர் மாத இறுதியில் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் கட்டடங்கள், விவசாயம், உட்கட்டமைப்புகள் ஆகியவற்றில் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 5.2 பில்லியன் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.
இந்தச் சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சுமார் 4 விழுக்காட்டிற்குச் சமமானது என டிசம்பர் 22ஆம் தேதி அது வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட இந்த வரலாறு காணாத இயற்கைப் பேரழிவில் சிக்கி 640க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 விழுக்காட்டிற்கும் அதிகமானோரை இது பாதித்தது.
உலக வங்கியின் உலகளாவிய விரைவான பேரிடர் சேத மதிப்பீடு அறிக்கையின்படி, சாலைகள், பாலங்கள், ரயில்வே, நீர்ப் பாசனம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளில் மிகப் பெரிய சேதம் ஏற்படுத்தியுள்ளன.
அதன் மதிப்பு, 2.23 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 1.2 பில்லியன் மதிப்புள்ள வீடுகள் சூறாவளியால் சேதமடைந்ததாகவும் உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

