கொழும்பு: இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க வெள்ளி கடனுதவிக்கான மூன்றாவது தவணையை வழங்க அனைத்துலகப் பண நிதியம் (ஐஎம்எஃப்) சனிக்கிழமையன்று (நவம்பர் 23) ஒப்புதல் அளித்தது. இருப்பினும், அந்நாட்டின் பொருளியல் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை என அது எச்சரித்தது.
மூன்றாவது கடன் தவணையாகக் கிட்டத்தட்ட 333 மில்லியன் அமெரிக்க வெள்ளியை இலங்கைக்கு வழங்கயிருப்பதாக ஐஎம்எஃப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்த தவணையுடன் சேர்த்து கிட்டத்தட்ட $1.3 பில்லியன் அமெரிக்க வெள்ளி பொருளியல் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடான இலங்கைக்கு அதிலிருந்து மீண்டுவர கடனுதவியாக அளித்திருப்பதாக அது மேலும் சொன்னது.
பொருளியல் மீட்சிக்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் ஐஎம்எஃப் அதில் குறிப்பிட்டது.