கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு அதிபர் அனுர குமார திசாநாயக்க வழிநடத்தும் கூட்டணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகளில் திரு திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக் (NPP) கூட்டணி வெற்றிபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அக்கூட்டணி மூன்றில் இரு பங்கு நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.