தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கை அதிபர் தேர்தல்: அனுரா குமாரா திசநாயக முன்னிலை

1 mins read
ace05b06-a7a5-47ab-b495-9a49c64d3822
இலங்கை மார்க்சிஸ்ட் அதிபர் வேட்பாளர் அனுரா குமாரா திசநாயக (நடுவில்) செப்டம்பர் 21ஆம் தேதி கொழும்பில் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையத்திற்கு வந்தார். - படம்: ஏஎஃப்பி

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமையன்று (செப்டம்பர் 21) நடந்தது. வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், இலங்கையின் மார்க்சிஸ்ட் அரசியல்வாதியான திரு அனுரா குமாரா திசநாயக (Anura Kumara Dissanayake) முன்னணியில் இருப்பதாக அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.

பதிவான 700,000 தபால் வாக்குகளில் 164,000 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. அவற்றில், கிட்டத்தட்ட 60.21 விழுக்காட்டு வாக்குகளைத் திரு திசநாயக பெற்றுள்ளார்.

அந்நாட்டில் அதிபர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தங்கள் வாக்குகளைத் தபால் வாக்களிப்பு மூலம் செலுத்தினர்.

சனிக்கிழமையன்று நடந்த அதிபர் தேர்தல் வாக்களிப்பில் சுமார் 76 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

அதிகாரபூர்வத் தேர்தல் முடிவுகள் இன்று (செப்டம்பர் 22) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பகட்ட முடிவுகளில் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதசவுக்கு 19.98 விழுக்காடு வாக்குகளும் இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிட்டத்தட்ட 18.59 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தலில் திரு ரணில் கடுமையான போட்டியை எதிர்கொண்டார்.

கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் அனைத்துலக பண நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் (S$3.7 பில்லியன்) கடன் பெறுவதை உறுதிசெய்யக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டது.

அதன் வெளிப்பாடு இத்தேர்தலில் பிரதிபலிக்கும் என்று சொல்லப்பட்டது. அந்நாட்டில் தேர்தல் முடிந்த பிறகு எட்டு மணி நேர நாடளாவிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்