$320 மில்லியன் டாலர் தொகுப்புத் திட்டத்தை அறிவித்த இலங்கை அரசாங்கம்

$320 மில்லியன் டாலர் தொகுப்புத் திட்டத்தை அறிவித்த இலங்கை அரசாங்கம்

1 mins read
547ddaf1-e0ab-4285-adcc-11399b832e46
இலங்கையில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள், கூடிய விரைவில் உதவித்தொகைகளை ரொக்கமாகப் பெறவிருக்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொழும்பு: இலங்கையில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள், கூடிய விரைவில் உதவித்தொகைகளை ரொக்கமாகப் பெறவிருக்கின்றனர்.

அரிசி, தேயிலை விவசாயிகளுக்கும் அந்த உதவித்தொகைக் கிடைக்கும்.

மத்திய கிழக்குப் போரால் அதிகரித்துள்ள எரிசக்தி விலைகளைக் கருத்தில்கொண்டு $320 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிவாரணத் தொகுப்புத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அதாவது இலங்கை மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 25 விழுக்காட்டினருக்கும் தொகுப்புத் திட்டம் கைகொடுக்கும் என்றார் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க.

சிங்கள, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வசதி குறைந்த குடும்பங்களுக்குக் கூடுதலாக இந்த மாதம் $25 டாலர் தொகையும் வழங்கப்படுகிறது.

மக்களுக்கு மின்சாரக் கட்டணங்களிலும் மானியங்கள் வழங்கப்படும்.

தற்போதுள்ள வரவுசெலவுத் திட்டத்தின்மூலம் நிவாரணத் தொகுப்புத் திட்டம் வழங்கப்படுவதாகத் திரு திசாநாயக்க கூறினார்.

அனைத்துலகப் பண நிதியத்திடமிருந்து $700 மில்லியன் டாலர் மதிப்பிலான அடுத்த தொகுப்புத் திட்டத்தை இலங்கை பெறவிருப்பதாகத் திரு திசாநாயக்க குறிப்பிட்டார்.

யூரியா உரத்துக்காகும் செலவில் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்றும் விவசாயிகளுக்குத் திரு திசாநாயக்க நம்பிக்கை அளித்தார்.

மத்திய கிழக்குப் போர் தொடங்கியதிலிருந்து இலங்கை அதன் எரிபொருள் விலைகளை மூன்றில் ஒரு பங்கும் மின்சாரக் கட்டணங்களை 40 விழுக்காடுவரையும் உயர்த்தியது.

குறிப்புச் சொற்கள்