இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று

1 mins read
7a354c3e-66a9-4f5a-bb17-fd769da7ce49
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று காலி - தெனியாய பிரதான வீதியில் கண்டறியப்பட்டுள்ளது. - படம்: தி மார்னிங்

கொழும்பு: நிமிடத்துக்கு 0,000 லீட்டர் நீரைத் தொடர்ச்சியாகப் பெறக்கூடிய நீர் ஊற்று ஒன்று இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் இது மிகப் பெரியது என்று கூறப்படுகிறது.

காலி - தெனியாய பிரதான வீதியில், பிட்டபெத்தர காவல் நிலையத்திற்கு அருகில் இந்த ஊற்று கண்டறியப்பட்டதாக தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் தென் மாகாணத்திற்கான புவியியலாளர் இந்திரஜித் கமகேய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய நீர் பாதுகாப்பை உறுதிசெய்யும் மிகப் பெரிய வளமாக இந்த நீர் ஊற்று பார்க்கப்படுகிறது.
இலங்கையின் தேசிய நீர் பாதுகாப்பை உறுதிசெய்யும் மிகப் பெரிய வளமாக இந்த நீர் ஊற்று பார்க்கப்படுகிறது. - படம்: டெய்லி மிரர்

“குழாய் கிணறு அமைப்பதற்காக அகழ்வுப் பணியின்போது, நிமிடத்திற்கு 10,000 லீட்டர் நீரைத் தொடர்ச்சியாகப் பெறக்கூடிய இந்த ஊற்று கண்டறியப்பட்டது.

“இலங்கையில் இவ்வளவு பெரிய நீர் ஊற்று கண்டறியப்படுவது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் ‘மடு’ பகுதியில் கண்டறியப்பட்ட நீர் ஊற்றே மிகப்பெரியதாகக் கருதப்பட்டது, தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

பாறை அடுக்குகளை ஆய்வு செய்து, அவற்றுக்கிடையேயான இடைவெளிகள் ஊடாக நிலத்தடி நீர் தேங்கியிருக்கும் இடங்களை நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் துல்லியமாகக் கண்டறிந்து இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குழாய் கிணறு அமைப்பதற்காக அகழ்வுப் பணியின்போது, நிமிடத்திற்கு 10,000 லீட்டர் நீரைத் தொடர்ச்சியாகப் பெறக்கூடிய இந்த ஊற்று கண்டறியப்பட்டுள்ளது.
குழாய் கிணறு அமைப்பதற்காக அகழ்வுப் பணியின்போது, நிமிடத்திற்கு 10,000 லீட்டர் நீரைத் தொடர்ச்சியாகப் பெறக்கூடிய இந்த ஊற்று கண்டறியப்பட்டுள்ளது. - படம்: டெய்லி மிரர்
இலங்கையில் இவ்வளவு பெரிய நீர் ஊற்று கண்டறியப்படுவது இதுவே முதன்முறை.
இலங்கையில் இவ்வளவு பெரிய நீர் ஊற்று கண்டறியப்படுவது இதுவே முதன்முறை. - படம்: டெய்லி மிரர்
இதற்கு முன்னர் ‘மடு’ பகுதியில் கண்டறியப்பட்ட நீர் ஊற்றே மிகப்பெரியதாகக் கருதப்பட்டது, தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ‘மடு’ பகுதியில் கண்டறியப்பட்ட நீர் ஊற்றே மிகப்பெரியதாகக் கருதப்பட்டது, தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. - படம்: டெய்லி மிரர்
Watch on YouTube
குறிப்புச் சொற்கள்