தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வானமா இல்லை சொர்க்கம் செல்லும் படிக்கட்டா ? வானத்தை அலங்கரித்த மேகங்கள் (படங்கள்)

1 mins read
18eab44c-ff6a-46b5-a40e-f63b4b912364
படம்: BINTULU NEWS PAGE/FACEBOOK -

இயற்கை அவ்வப்போது மனிதர்களுக்குத் தனது அழகைக் காட்டி வியக்கவைக்கும். அப்படி ஒரு விஷயம் மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் அண்மையில் நடந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 6) அன்று பிந்துல்லு பகுதியில் மேகங்கள் வித்தியாசமான முறையில் வானத்தில் சூழ்ந்திருந்தன. அது அவ்வட்டார மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

வியப்பில் மூழ்கிய மக்கள் உடனடியாக தங்கள் கைப்பேசிகளை எடுத்து காணொளிகளையும் படங்களையும் எடுக்கத் தொடங்கினர்.

இயற்கை அனைவருக்கும் சொந்தம் என்று கருதி பலர் சமூக ஊடகங்கள்வழி அக்காணொளிகளையும் படங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

மக்கள் பார்த்த மேகங்கள் 'ஆர்கஸ் மேக வடிவம்' என்று மலேசிய வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

ஆர்கஸ் மேகங்கள் பூமிக்கு அருகில் வரக்கூடியவை என்றும் அவற்றால் சக்தி வாய்ந்த புயல்களும் இடிகளும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அவ்வகை மேகங்களால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என்றும் ஆய்வகம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்