தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மாரில் அவசரநிலை நீட்டிப்பு

1 mins read
813f446a-d1c7-4815-b25e-8815327fae18
மியன்மார் ராணுவ ஆட்சியில் செயல்படுகிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

நேப்பிடோ: மியன்மாரில் அவசரநிலை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரின் ராணுவ அரசாங்கம் அவ்வாறு செய்திருப்பதாக அதற்குச் சொந்தமான ஊடகம் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 31) தெரிவித்தது. அந்நாட்டில் ராணுவம் வலுக்கட்டாயமாக ஆட்சியைக் கைப்பற்றி நான்காண்டுகள் நிறைவடைவதற்கு முதல் நாளன்று இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

அதற்கு முன்பு மியன்மார் 10 ஆண்டு காலத்துக்கு ஜனநாயக ஆட்சியில் செயல்பட்டது. அமைதிக்கான நோபெல் பரிசைப் பெற்ற ஆங் சான் சூச்சியின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மியன்மார் ராணுவம் 2021ஆம் ஆண்டில் கவிழ்த்தது.

இவ்வாண்டு தேர்தலை நடத்த மியன்மாரின் ராணுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நடக்கவிருக்கும் தேர்தலுக்கு எதிராக கவனிப்பாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிறரின் மூலம் ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கத் திட்டமிட்டுள்ளனர் என்பது கவனிப்பாளர்களின் வாதம்.

குறிப்புச் சொற்கள்