ஜேம்ஸ் குக் சிலை மீண்டும் நிறுவப்படாது: மெல்பர்ன் மேயர்

1 mins read
d259f1ac-e080-4ccd-9935-5987f6474746
சேதப்படுத்தப்பட்ட பிரிட்டி‌ஷ் ஆராய்ச்சியாளார் ஜேம்ஸ் குக்கின் நினைவுச்சின்னம். - படம்: 3ஏடப்பளியு

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பிரிட்டி‌ஷ் ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் குக்கின் சேதப்படுத்தப்பட்ட சிலையை மறுநிர்மாணம் செய்யப்போவதில்லை என்று மெல்பர்ன் மேயர் தெரிவித்துள்ளார். மீண்டும் அந்தச் சிலை சேதப்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அவ்வாறு முடிவெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மெல்பர்னில் கிரெனைட்டாலும் வெண்கலத்தாலும் உருவாக்கப்பட்ட அந்தச் சிலையைப் பலர் குறிவைத்து சேதப்படுத்துகின்றனர். கடந்த ஆண்டு சிலை சேதப்படுத்தப்பட்டதோடு அதன் மேல் கிறுக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டும் சாயம் அடிக்கப்பட்டு ‘வெட்கம்’, ‘வெள்ளை ஆதிக்கம் ஒழிக’ போன்ற வாசகங்கள் சிலைமீது எழுதப்பட்டன.

மெல்பர்னின் யாரா நகர மேயர் ஸ்டீஃபன் ஜோலி, “குக்கின் நினைவுச்சின்னம் மீண்டும் நிர்மாணிக்கப்படாது. அது மீண்டும் சேதப்படுத்தப்படும்,” என்றார்.

தொடர்ந்து அப்படியே நடந்துகொண்டிருந்தால் எப்படி அதை நியாயப்படுத்துவது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவின் தேசியத் தினத்துக்கு முன் குக்கின் வேறொரு சிலைமீது சிவப்புச் சாயம் ஊற்றப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்கள் பக்கம் கவனத்தைத் திருப்ப முயல்வோர் காலனித்துவப் பிரதிநிதிகளான குக் போன்றோரின் நினைவுச்சின்னங்களைக் குறிவைத்து சேதப்படுத்துகின்றனர்.

1770ஆம் ஆண்டு போட்டனி பே பகுதிக்குக் கடல் வழி பயணம் செய்த குக், ‘டெர்ர நல்லியஸ்’ என்ற சாசனத்தின் கீழ் கிழக்கு ஆஸ்திரேலியாவைப் பிரிட்டனுக்குச் சொந்தமாக்கினார். அங்குள்ள பழங்குடி மக்களின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றை அவர் புறக்கணித்ததாகக் குறைகூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்