வெலிங்டன்: நியூசிலாந்தில் புயல் காற்று வீசியதுடன் கனமழை பெய்ததில் திங்கட்கிழமை (பிப்ரவரி 16) வழக்கநிலை பாதிக்கப்பட்டது.
அந்நாட்டில் விமானச் சேவைகள், ரயில் சேவைகள், படகுச் சேவைகள் ஆகியவை தடைப்பட்டன.
நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள சில சாலைகள் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தலைநகர் வெலிங்டனில் பெரும்பாலான விமானச் சேவைகள் திங்கட்கிழமை காலை ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமடைந்தன.
புயல் காரணமாகப் பலர் மின்சாரம் இன்றி தவித்தனர்.
சாலைகளைத் தவிர்க்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
புயல் காரணமாகப் பல இடங்கள் சேதமடைந்திருப்பதாகவும் அவசரநிலைப் பணியாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

