தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புயல்: அமெரிக்காவின் விமானச் சேவைகள் ரத்து

1 mins read
09b10819-2f58-430c-bc02-368c125d2765
ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் தாமதடைந்தன. - படம்: ஏஎஃப்பி

சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் தென்பகுதியில் புயல் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 11) 3,000க்கும் அதிகமான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

அதுமட்டுமல்லாது, ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் தாமதமடைந்தன.

அட்லாண்டா அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள ஐந்து ஓடுபாதைகளும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்ததாக டெல்டா ஏர்லைன்ஸ் கூறியது.

அட்லாண்டாவில் இயந்திரக் கோளாறு காரணமாக ஓடுபாதையிலிருந்து புறப்பட இருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் கடைசி நேரத்தில் அதன் பயணத்தை ரத்து செய்தது.

அந்த விமானத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட பயணிகள், சிப்பந்திகள் அவசரகால சறுக்கு மிதவைகள் மூலம் வெளியேறினர்.

டெக்சஸ், வடகெரோலைனா ஆகிய மாநிலங்களும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டன.

அம்மாநிலங்களில் 1,200க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்