பயங்கரவாதம்: மலேசியாவில் உச்சகட்டப் பாதுகாப்பு

பயங்கரவாதம்: மலேசியாவில் உச்சகட்டப் பாதுகாப்பு

1 mins read
077e0d2a-e8e4-40e2-ab5d-77fdaff5cc7f
-

கோலாலம்பூர்: கடந்த சில மாதங் களில் பல பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள், ஜகார்த்தாவில் அண்மையில் நடந்து உள்ள பயங்கரவாதத் தாக்குதல் ஆகிய வற்றை அடுத்து, மலேசியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உச்ச கட்டத்தை எட்டியுள்ளன என்று மலேசிய போலிஸ் உயர் அதிகாரி காலிட் அபு பக்கர் தெரிவித்து உள்ளார். ஜகர்த்தாவில் நடந்ததைப் போன்ற தாக்குதல் மலேசியாவில் நடக்காமல் தடுக்க பல்வேறு தற்காப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டுள்ள தாகக் கூறினார் காலிட் அபு பக்கர்.

"வணிக வளாகங்கள், கடைத் தொகுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப் பட்டுள்ளன," என்றும் அவர் கூறினார்.