ஒபாமா: பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்துலக ஒத்துழைப்பு தேவை

ஒபாமா: பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்துலக ஒத்துழைப்பு தேவை

1 mins read
335e5d74-9dbd-4045-a9b2-ad943335dd10
-

வா‌ஷிங்டன்: உலகம் முழுவதும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை துடைத்தொழிக்க அனைத்துலக நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் ஐஎஸ் அமைப்பை ஒழிப்பதற்கான நடவடிக்கையைத் தொடரும்படி திரு ஒபாமா தேசிய பாதுகாப்பு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக நேச நாடுகளின் படைகளுடன் இணைந்து அந்த அமைப்புக்கு கிடைத்து வரும் நிதி வசதிகளை முடக்குவது, சிரியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு வெளியே அதன் கிளையை விரிவாக்கம் செய்வதை தடுப்பது, இளைஞர்களை ஈர்ப்பதற்கான பிரசாரம் மற்றும் தகவல்களை நிறுத்துவது, அதன் வெளிநாட்டுத் தெடர்புகளை துண்டிப்பது மற்றும் தாக்குதல் சதித் திட்டங்களை முறியடிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கெள்ளும்படி ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.