பிரெஞ்சு பிரதமர்: ஐஎஸ் தோற்கடிக்கப்படும் வரை அவசரநிலை நீடிக்கும்

பிரெஞ்சு பிரதமர்: ஐஎஸ் தோற்கடிக்கப்படும் வரை அவசரநிலை நீடிக்கும்

1 mins read
fc145cf4-3628-4f3e-9327-f7885d9f9ac2
-

பாரிஸ்: ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டம் வெற்றி பெற்று ஐஎஸ் அமைப்பு தோற்கடிக்கப்படும் வரை பிரான்சில் அவசரநிலை தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் மெனுவல் வேல்ஸ் கூறியுள்ளார். கடந்த நவம்பர் 13ஆம் தேதி ஐஎஸ் போராளிகள் பாரிஸ் நகரில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

பின்னர் அவசரநிலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டது. அவசரநிலையை நீட்டிப்பதன் மூலம் சோதனைகளை மேற்கொள்ளவும் சந்தேக நபர் களை கைது செய்யவும் போலி சாருக்கு கூடுதல் அதிகாரம் கிடைப்பதாக பிரதமர் கூறினார். பாரிஸ் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.