சோமாலிய உணவகம் மீது குண்டு வீச்சு; 19 பேர் பலி

சோமாலிய உணவகம் மீது குண்டு வீச்சு; 19 பேர் பலி

1 mins read
1f9e1b05-b76e-4800-9802-2585da926863
-

மொகாடி‌ஷு: சோமாலிய நாட்டின் தலைநகர் மொகாடி‌ஷுவில் உள்ள பிரசித்தி பெற்ற கடற்கரையோர உணவு விடுதி மீது துப்பாக்கிக்காரர்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் குறைந்தது 19 பேர் பலியானதாக அந்நாட்டு போலிசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர் என்று போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தத் தாக்குதலுக்கு அல்-காய்தாவுடன்- தொடர்புடைய ஷெபாப் போராளிகள் பொறுப்பேற்றுள்ளனர். தாக்குதல் நடத்திய போராளிகளில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ஒருவன் பிடிபட்டுள்ளதாகவும் போலிசார் கூறினார். சோமாலியாவில் போராளிகள் அடிக்கடி இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.