மலேசிய தைப்பூசத்தில் ஒரு மில்லியன் பேர்

1 mins read
58b556ed-c6d0-429d-907d-dd33f5075b23
-

பத்துமலை: மலேசியாவில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தைப்பூச விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடினர். பால்குடம், அலகுக் காவடிகளை ஏந்தியும் ஆணிக் கால்களை அணிந்து, தேர்ககளை இழுத்தும் தங்களுடைய பிரார்த்தனைகளை அவர்கள் நிறைவேற்றினர். கோலாலம்பூரில் உள்ள புகழ் பெற்ற பத்துமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அவர்களில் பலர் பத்து மணி நேரத்திற்கு மேல் பாதயாத்திரையாக வந்து பத்துமலையின் 272 படிகளில் ஏறி முருகனை வழிபட்டனர்.

சுமார் 15 கிலோ மீட்டர் நீள தேர் ஊர்வலத்தில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.