பிரான்சில் டாக்சி ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டம்

பிரான்சில் டாக்சி ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டம்

1 mins read
69fb27a0-97fb-4390-9c25-4194a9462a96
-

பாரிஸ்: பிரான்சில் டாக்சி ஓட்டுநர்கள் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகின்றனர். காரணம் தற்போது தனியார் கார் நிறுவனங்களும் பயணிகளை ஏற்றிச்செல்லும் சேவையைத் தொடங்கியிருக்கின்றன. தற்போது உபர் போன்ற கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் சினமுற்ற டாக்சி ஓட்டுநர்கள் பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான நிலையங்களிலும் முக்கிய சாலைகளிலும் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்ட தாகவும் தகவல்கள் கூறின. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்சி ஓட்டுநர்கள் சாலைகளில் டயர்களை ஆங்காங்கே வைத்து வாகனங்கள் செல்வதை தடை செய்ததாகக் கூறப்பட்டது. பாரிஸ் நகரில் மறியல் போராட்டம் காரணமாக பல விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

பாரிஸ் நகரில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட டாக்சி ஓட்டுநர்கள் டயர்களைப் பயன்படுத்தி சாலையில் செல்லும் வாகனங்களைத் தடை செய்கின்றனர். இதனால் முக்கிய சாலைகளில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உபர் கார்கள் போன்ற கார்கள் தங்களுக்கு போட்டியாக வந்துவிட்டதால் தங்கள் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கூறும் டாக்சி ஓட்டுநர்கள் நேற்று பல இடங்களில் சாலை மறியல் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி