யங்கூன்: மியன்மாரில் ஜனநாய மாற்றம் மக்களுக்கான வெற்றி என்று அந்நாட்டு அதிபர் தியன் செய்ன் கூறியுள்ளார். மியன்மார் நாடாளுமன்றத்தில் அவர் நேற்று இறுதி உரை ஆற்றினார். "சிரமங்களும் சவால்களும் இருந்த போதிலும் இறுதியில் ஜனநாயக மாற்றத்தை எங்களால் கொண்டுவர முடிந்தது," என்று திரு தியன் கூறினார். மியன்மார் மக்கள் அனைவருக்குமான மிகப் பெரிய வெற்றி இது என்று அவர் குறிப்பிட்டார். தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சான் சூச்சியின் கட்சி புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளது.
மியன்மாரில் ஜனநாயக மாற்றம்
1 mins read
-

