வாஷிங்டன்: கொசுக்கள் மூலம் பரவக்கூடிய ஸிக்கா வைரஸ் பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வேகமாகப் பரவி வரும் வேளையில் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த ஆண்டு சுமார் நான்கு மில்லியன் பேருக்கு இந்த வைரஸ் தொற்றக்கூடும் என்று விஞ்ஞானி கள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார நிறுவனமும் இதனை ஒப்புக்கொண்டுள்ளது. ஸிக்கா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் உலக சுகாதார நிறுவனம் முக்கிய பங்காற்ற வில்லை என்று அமெரிக்க நிபுணர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த அமைப்பு வரும் திங்கட்கிழமை அவசரக் கூட்டத் தைக் கூட்டி ஆலோசனை நடத்த உள்ளது.
இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
குவாட்டமாலாவில் ஸிக்கா வைரஸ் தொற்றியதாக சந்தேகிக்கப்படும் கர்ப்பிணி மாதின் ரத்தம் சோதிக்கப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

