அய்வசிக்: துருக்கிய கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் மூழ்கிய குடியேறிகள் படகு ஒன்றில் பயணம் செய்த குழந்தை கள் உள்ளிட்ட 37 பேரின் சடலங் களைக் கடலோரக் காவல் படையினர் மீட்டெடுத்தனர். இதுவரை 75 பேரை உயிரோடு மீட்டுள்ளனர். வடமேற்கு துருக்கியில் உள்ள 'கனக்கலே' மாநிலத்திற்கு அருகில் அந்த சம்பவம் நடந்தது. குடியேறிகள் பயணம் செய்த அந்தப் படகு கிரேக்கத் தீவான லெஸ்போஸ் வழியாக ஐரோப்பாவை நோக்கிச் சென்றது. அந்தப் படகில் பயணம் சிரியா, ஆப்கா னிஸ்தான், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர். சிரியா, ஈரான் ஆகிய நாடு களில் அமைதி திரும்பியதும் அகதிகளில் பெரும்பாலோர் மறு படியும் தங்கள் நாடுகளுக்குத் திரும்புவர் என்று எதிர்பார்ப்பதாக ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கூறியதை அடுத்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
யூகோஸ்லாவியாவை உதா ரணமாகக் காட்டிய ஏஞ்சலா மெர்கல், 1990ஆம் ஆண்டில் ஜெர்மனிக்கு வந்த யூகோஸ்லா விய அகதிகளில் 70 விழுக்காட்டினர் அவர்கள் நாட்டில் அமைதி திரும்பியதும் மீண்டும் சொந்த நாட்டுக்கே திரும்பிச் சென்றனர் என்றார். இவ்வாண்டு மட்டும் இதுவரை 218 பேர் பலியாகியுள்ளனர் எனப் புலம்பெயர்வோருக்கான அனைத் துலக அமைப்பு தெரிவித்து உள்ளது. சிரியாவில் இருந்து 250,000 பேர் அகதிகளாக துருக்கி சென்று உள்ளனர். போதைப் பொருள் கடத்தல் தொடர்புக்கு எதிராகவும் ஐரோப்பிய நாடுகளுக்குள் அகதிகள் புலம்பெயர்வதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க துருக்கி ஒப்பு தல் அளித்தது. இதற்குப் பதிலாக, அகதிகளின் நிலைமையை முன்னேற்ற உதவுவதற்கு 300 கோடி யூரோ நிதியை அளிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உறுதி அளித்துள்ளது.