சாகித்: வெளிநாட்டு ஊழியர் தீர்வை: 2.5 பில்லியன் ரிங்கிட் வருவாய்

சாகித்: வெளிநாட்டு ஊழியர் தீர்வை: 2.5 பில்லியன் ரிங்கிட் வருவாய்

1 mins read
97e4d91d-2d8b-40db-9d81-ab3cb0c5121a
-

கோலாலம்பூர்: வெளிநாட்டு ஊழி யர் தீர்வை முறையில் மலேசிய அரசாங்கம் உயர்த்த முடிவெடுத்த நிலையில் அதன் மூலம் 2.5 பில்லியன் ரிங்கிட் வருவாய் கிட்டும் என்று மலேசியத் துணைப் பிரதமர் அகமது சாகித் ஹமிடி கூறியுள்ளார். மாற்றம் செய்யப்பட்டுள்ள இரண்டு பிரிவுகளில் வெளிநாட்டு ஊழியர் தீர்வை இன்று முதல் நடப்புக்கு வரும் என்று கூறப் படுகிறது.

கட்டுமானத் துறை, சேவைத் துறைகளில் பணியாற்றும் வெளி நாட்டு ஊழியர் ஒவ்வொருவரும் 2,500 ரிங்கிட் செலுத்துவார். தோட்டம், விவசாயத் துறை யில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர் ஒவ்வொருவரும் 1,500 ரிங்கிட் செலுத்துவர்.