ஸிக்கா கிருமி: சமாளிக்க தயார் நிலையில் மலேசியா

ஸிக்கா கிருமி: சமாளிக்க தயார் நிலையில் மலேசியா

1 mins read
af47d8bd-910c-40bb-89af-39178ac7a540
-

கோலாலம்பூர்: உலகை அச்சுறுத்தி வரும் ஸிக்கா கிருமி பரவலை எதிர்கொள்ள மலேசியா தயார் நிலையில் உள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். ஸிக்கா கிருமி தொற்றுவதைக் கண்டுபிடிக்கும் அனைத்து வசதிகளும் மலேசியாவில் உள்ளன என்று அவர் சொன்னார். புத்ராஜெயாவில் நடந்த செய்தியாளர்கள்கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிறந்த கண்காணிப்பு மற்றும் சிகிச்சை மூலம் ஸிக்கா கிருமியைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் சொன்னார். சுகாதார அமைச்சு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கை மூலம் இதுவரை மலேசியாவில் ஸிக்கா கிருமி தொற்று சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் சொன்னார்.

கொசு மருந்து அடிக்கும் மலேசிய சுகாதார ஊழியர். படம்: ராய்ட்டர்ஸ்