லண்டன்: லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் கடந்த மூன் றரை ஆண்டுகளாகத் தஞ்சம் புகுந்திருக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, 44, சுதந்திரமாக நடமாட அனு மதிக்கப்படவேண்டும் என்றும் அவரது சுதந்திரம் முடக்கப் பட்டதற்கு அவருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் ஐநா சட்டக் குழு அறிவித்துள்ளது. "அசாஞ்சேயின் தடுப்புக் காவல் முடிவுக்கு வர வேண்டும். அவரது சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்," என்றது ஐநா குழு. 'பல்வேறு விதங்களில் அசாஞ்சேயின் சுதந்திரம் பறிக்கப் பட்டது' என்றும் 2010ஆம் ஆண்டு அவர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டது முதல் தொடர்ந்து அவரது சுதந்திரம் பறிக்கப்பட்டு வந்துள்ளது என்றும் ஐநா குழு கூறியது. தான் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக ஐநா குழுவிடம் புகார் அளித்திருந்தார் அசாஞ்சே.
கைதாவதிலிருந்து தப்புவதற்காக 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அசாஞ்சே ஈக்வடார் தூதரகத்தில் அடைந்து கிடந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் 500,000 ராணுவ ரகசிய ஆவணங்களையும் ஆப்கானிஸ்தான், ஈராக் போர்கள் தொடர்பான 250,000 ஆவணங்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

