இந்தியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல்: அரபு எச்சரிக்கை

இந்தியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல்: அரபு எச்சரிக்கை

1 mins read
ee4af4cb-6642-4cee-a292-88e2b3f75a71
-

உலக நாடுகள் பலவற்றுக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத மிரட்டல் இருந்துவரும் நிலையில் இந்தி யாவுக்கும் அந்த மிரட்டல் இருப் பதாக ஐக்கிய அரபு சிற்றரசுகள் (யுஏஇ) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய அரபு சிற்றரசுகளின் பட்டத்து இளவரசர் முகமது சை யது அல் நாஹ்யன் இன்று இந்தி யா வரும் வேளையில் அந்நாட்டின் வெளியுறவு துணை அமைச்சர் அன்வார் கார்காஷ் இந்த எச் சரிக்கையை வெளியிட்டுள்ளார். "இது ஒரு நீண்டகால மிரட்டல். இதனை சகித்துக்கொள்ள இய லாது. இருநாடுகளும் ஒத்துழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

"ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை எதிர்த்துப் போராடுவதில் முதல் நிலையில் உள்ளோம். அந்த அமைப்பின் மிரட்டல் உலகளாவி யது. தனக்கு மிரட்டல் இல்லை என்று எந்த நாடாவது கருதினால் அது அலட்சியமாக உள்ளது என்றும் தாக்கப்படக்கூடிய அபா யத்தில் உள்ளது என்றும் பொருள்," என்றார் திரு கார்காஷ். ஆகஸ்ட் மாதம் இந்தியப் பிரதமர் அபுதாபிக்கு மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வருகையைத் தொடர்ந்து இரு நாடுகளும் புதிய உத்திபூர்வ பங்காளித்துவத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பாகிஸ்தான் எல்லையிலுள்ள இந்திய விமானப்படைத் தளம். படம் ஏஎப்பி