பெர்லின்: ஜெர்மனியின் பவேரியா பகுதியில் நேற்று இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தது எண்மர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த விபத்துக்கான காரணம் பற்றி இன்னமும் சரியாகத் தெரியவராத நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. "100 பேர் காயமடைந்துள்ளனர். பலர் படுகாயமைந்துள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர்," என்று போலிஸ் தரப்புப் பேச்சாளர் கூறியுள்ளார். உள்ளூர் நேரப்படி காலை மணி 6.48க்கு ஜெர்மனியின் தென் கிழக்கு மூலையில் இருக்கும் பாட் ஐபிலிங் என்ற ஊரில் அந்த விபத்து நடந்துள்ளது.
ஜெர்மனியில் இரு ரயில்கள் மோதல்: எண்மர் பலி
1 mins read
-

