ஏவுகணைச் சோதனை மேற்கொண்ட வடகொரியாவுக்கு ஜப்பான் கண்டனம்

ஏவுகணைச் சோதனை மேற்கொண்ட வடகொரியாவுக்கு ஜப்பான் கண்டனம்

1 mins read
227521fb-761b-43a1-b420-98c406fa7e22
-

டோக்கியோ: வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைக்கு ஜப்பான் நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்துலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்று வடகொரியாவின் அச்செயலை கண்டித்த ஜப்பான் அது போன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. "இது முற்றிலும் சகிக்கக்கூடியதல்ல," என்று கூறிய ஜப்பானிய பிரதமர் ‌ஷின்சோ அபே விரைவில் வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றார். சோஹே ஏவுகணைத் தளத்திலிருந்து,

செயற்கைக்கோளைத் தாங்கிய ஏவுகணை விண்ணில் பாய்ந்தது என்று வடகொரிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது. அந்நடவடிக்கையை அதிபர் கிம் ஜோங்லிஉன் நேரடியாக உத்தரவிட்டு வழிநடத்தினார் என்று தெரிகிறது.