தைனான்: தைவானின் தைனான் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டடங்கள் குலுங்கின. கட்டடம் இடிந்து விழுந்த இரு நாள்களுக்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கி 61 மணி நேரம் உயிருக்குப் போராடிய 8 வயது சிறுமி உள்பட 4 பேரை 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில், கட்டட இடிபாடுகளுக்கு இடையே இன்னும் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 1989ஆம் ஆண்டு கட்டப்பட்ட அக்கட்டடம் முற்றிலுமாக இடிந்து விழந்துள்ளது.
தைவான் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு
1 mins read
-

