அலெப்போ: சிரியாவின் அலெப்போ நகரின் 'கஃபீன்' புறநகர்ப் பகுதியை அந்நாட்டு ராணுவம் இரு தினங்களுக்கு முன்னர் கைப்பற்றிய நிலையில் சிரியாவில் அரசாங்கத்துக்கு ஆதரவாக ரஷ்யா நடத்தியுள்ள வான்வெளித் தாக்குதல்கள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் கூறியுள்ளார். அரசு ஆதரவு ஹிஸ்புல்லா படையினரின் தொலைக்காட்சி மீட்கப்பட்ட பகுதியிலிருந்து காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பியது. தாக்குதல் காரணமாக அந்த நகரிலிருந்து 35,000 பேர் துருக்கியில் தஞ்சமடைவதற்காக அந்த நாட்டின் எல்லையில் குவிந்துள்ளனர்.
ஏஞ்செலா மெர்கல்: ரஷ்யாவின் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது
1 mins read
-

