1எம்டிபி நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு விசாரணை: ஊடகங்களுக்குத் தடை

1எம்டிபி நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு விசாரணை: ஊடகங்களுக்குத் தடை

1 mins read
fee95c28-d4de-43f7-9b6b-567e9ed35380
-

கோலாலம்பூர்: மலேசிய நாடா­ளு­மன்றத்­தில் அரசுத் தரப்பு, எதிர்க்­கட்சி என இரு கட்சி உறுப்­பி­னர்­களைக் கொண்ட பொதுக் கணக்­குக் குழு­வி­னர் 1எம்டிபி நிறு­வ­னம் தொடர்­பாக நடத்­தும் விசா­ரணையை நேரில் காணச் சென்ற ஊடக பிர­தி­நி­தி­களுக்கு அனுமதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. மலே­சி­யா­வின் தேசிய முத­லீட்டு நிறு­வ­ன­மான 1எம்டிபி தொடர்­பான இறு­திக்­கட்ட விசாரணை நாடா­ளு­மன்றத்­தில் நடந்து வரு­கிறது. இது குறித்து புதன்­கிழமை தகவல் கிடைத்த ஊடகத் துறை­யி­னர் நேற்று விசா­ரணையை நேரில் காண நாடா­ளு­மன்றத்­திற்கு சென்ற­னர். ஆனால் அவர்­களுக்கு அனுமதி மறுக்­கப்­பட்­டது.

இதனால் 1எம்­டி­பி­யின் முன்னாள் தலை­வ­ரான டான் ஸ்ரீ முகமது பாக்­கெ­யி­டம் விசாரணை தொடர்­பாக அவரது கருத்­து­களைக் கேட்க நாடா­ளு­மன்றத்­தில் விசாரணை நடக்­கும் அறைக்கு வெளியே காத்­தி­ருந்த ஊடகத் துறை­யி­னர் அவரிடம் பேச முடி­யா­மல் போனதாக தி ஸ்டார் செய்­தித்­தாள் கூறு­கிறது.