ஆஸ்திரேலியாவில் இரண்டாவது கர்ப்பிணிக்கு ஸிக்கா கிருமி தொற்று

ஆஸ்திரேலியாவில் இரண்டாவது கர்ப்பிணிக்கு ஸிக்கா கிருமி தொற்று

1 mins read
16cd8d3d-be09-45fc-9232-cc2c4142cad5
-

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தில் வசிக்கும் ஒரு கர்ப்பிணிக்கு ஸிக்கா கிருமி தொற்றியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஸிக்கா கிருமி தொற்று கண்ட இரண்டாவது கர்ப்பிணி அவர். பிரேசிலில் ஸிக்கா கிருமி பாதிப்பால் மூன்றாவது நபர் இறந்துள்ள நிலையில், வெனிசு வேலாவில் மூன்று பேர் ஸிக்கா கிருமியால் இறந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். ஸிக்கா கிருமி பாதிக்கப்படும் கர்ப்­பி­ணி­களுக்­கு சிறிய தலை, மூளை பாதிப்பு, பார்வைக் குறை பாடு, நரம்பு மண்டல பாதிப்­பு­களு­டன் குழந்தை­கள் பிறக்­கின்றன. 33 நாடுகளில் ஸிக்கா கிருமி பாதிப்பு இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. ­