சிஐஏ: ஐஎஸ்ஐஎஸ் ரசாயன ஆயுதத்தை தயாரித்துப் பயன்படுத்தியுள்ளது

1 mins read
4854aa41-c00a-45f4-b2ba-b1b8e89a7695
-

வா‌ஷிங்டன்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் ரசாயன ஆயுதங்களை உருவாக்கும் திறன் பெற்றவர்கள் என்றும் அவர்கள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி உள்ளனர் என்றும் அமெரிக்கக் குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஜான் பிரன்னன் கூறியுள்ளார். சிறியளவில் குளோரின், 'மஸ்டர்ட் கேஸ்' உள்ளிட்டவற்றை உருவாக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஐஎஸ் அமைப்பினர் என்று சிஐஏ தெரிவித்தது. "ஐஎஸ் அமைப்பு போர் பூமியில் ரசாயன ஆயுதங்களைப் பயன் படுத்தியதற்கான பல ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. முன்னோடி கள் விட்டுச் சென்ற ரசாயன ஆயுதங்கள் அவர்களுக்கு உண்டு என்பதற்கான அறிக்கை களும் எங்களிடம் உண்டு," என்றார் பிரன்னன்.

நிதி ஆதாயங்களுக்காக ரசாயன ஆயுதங்களை அவர்கள் மேற்கு நோக்கி ஏற்றுமதி செய்யக் கூடிய சாத்தியம் உண்டு என்று அவர் எச்சரித்தார். "அதனால், ஏற்றுமதி, கடத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு அவர் கள் பயன்படுத்தும் போக்கு வரத்தைத் துண்டிப்பது மிக முக்கியம்," என்றார் அவர்.

அமெரிக்கக் குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஜான் பிரன்னன். படம்: ஏஎஃப்பி