பெர்த்: ஆஸ்திரேலிய மருத்துவ மனையின் மருத்துவர்கள், நாடு கடத்தப்படுவதை எதிர்நோக்கும் சிறுமியை விடுவிக்க மறுத்து விட்டனர். சிறுமிக்கு மோசமான தீக் காயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரிஸ்பேனில் உள்ள லேடி சிலென்டோ குழந்தைகள் மருத்து வமனையிலிருந்து ஒரு வயது பெண் குழந்தை விடுவிக்கப்பட மாட்டாது என்று அந்த மருத்துவ மனையின் பேச்சாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித் தார். ஆஸ்திரேலியாவுக்கு வட கிழக்கே 3,000 கி. மீட்டர் தொலை வில் உள்ள தென் பசிபிக் தீவான நாஹ்ருவில் உள்ள முகாமுக்கு அகதிகளான சிறுமியும் அவரது பெற்றோரும் திருப்பி அனுப்பி வைக்கப்படவிருக்கின்றனர்.
அந்தத் தடுப்பு நிலையத்தில் 500க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இதற்கிடையே இந்தத் தடுப்பு நிலையம் மோசமான நிலையில் இருப்பதால் பலர் கடுமையாகக் குறை கூறி வருகின்றனர். இம்மாதத்தின் தொடக்கத்தில் நாஹ்ருவிலிருந்து ஆஸ்திரே லியாவுக்கு சிகிச்சை அளிப்பதற் காகக் கொண்டுவரப்பட்ட 267 அகதிகளை திருப்பியனுப்பும் ஆஸ்திரேலிய அரசின் உரிமைக்கு சவால் விடுக்கும் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், அகதிகள் இரக்க உணர்ச்சியுடன் நடத்தப்படுவார்கள் என்றும் தீவில் குடியமர்த்துவது குறித்து ஒவ் வொருவரும் தனித்தனியாக பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார்.
கேன்பராவில் சமூக ஆர்வலர்கள் சிலர் அடைக்கலம் தேடி வந்த குழந்தை களை திருப்பி அனுப்ப எதிர்ப்பு தெரிவித்தனர். படம்: ஈபிஏ

