மலேசியப் பிரதமரை பதவியிலிருந்து அகற்ற துடிக்கும் குழுவுக்கு மகாதீர் முழு ஆதரவு

மலேசியப் பிரதமரை பதவியிலிருந்து அகற்ற துடிக்கும் குழுவுக்கு மகாதீர் முழு ஆதரவு

1 mins read
89fb386c-2ccc-49a2-aded-b6f03bf42093
-

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கை பிரதமர் பதவி யிலிருந்தும் அம்னோ தலைவர் பதவியில் இருந் தும் அகற்றும் முயற்சியில் மலேசிய அம்னோ கிளைத் தலைவர்களின் கூட்டணி (ஜிகேசிஎம்) என்னும் அமைப்பு தீவிர முயற்சிகளில் இறங்கியுள் ளது. கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட அந்த அமைப்பு அம்னோவை சீரழிவிலிருந்து காப் பாற்ற வேண்டுமானால் நஜிப் பதவி விலக வேண்டும் என்று கூறி வருகிறது.

நாடு முழுவதும் உள்ள அம்னோ கிளைத் தலைவர்கள் தங்களது அமைப்பில் இருப்ப தாகச் சொல்லி வரும் அது தனது அடுத்த கட்ட முயற்சியாக முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவின் தயவை நாடியது. தலைநகரில் யாயாசன் அல்புகாரியில் உள்ள மகாதீரின் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட் டத்தில் அம்னோ கிளைத் தலை வர்களின் கூட்டணியைச் சேர்ந் தோர் மகாதீருடன் உரையாடினர். அதன் பிறகு அந்த அமைப்பினர் தெரிவிக்கையில் கூட்டணியின் நஜிப் எதிர்ப்புக்கு தமது முழு ஆதரவை அளிப்பதாக மகாதீர் உறுதி தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டது.