நியூசிலாந்தை உலுக்கிய 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

நியூசிலாந்தை உலுக்கிய 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

1 mins read
647f28c6-3e1e-4b18-967e-fe5ed0e3fb56
-

வெல்­லிங்­டன்: நியூ­சி­லாந்­தின் கிரைஸ்ட்­சர்ச் நகரில் நேற்று 5.8 ரிக்டர் அள­வி­லான நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டது. அதனைத் தொடர்ந்து நில­ந­டுக்­கத்­துக்­குப் பிறகான அதிர்­வு­கள் ஏற்­ப­டக்­கூடும் என நியூ­சி­லாந்து நில­ந­டுக்க கண்­ கா­ணிப்­புச் சேவையான 'ஜியோ நெட் சைன்ஸ்' அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். தெற்கு தீவில் எச்­ச­ரிக்கை ஒலிகள் கேட்­ட­தா­க­வும் குறைந்தது ஒரு கட்­ட­டத்­தில் இருந்­தோர் அதனை விட்டு வெளி­யேற்­றப்­பட்­ட­தா­க­வும் ஊட­கங்கள் தெரி­வித்­தன. கற்­பாறை­கள் கட­லுக்­குள் நொறுங்கி விழுந்த­தால் கடற்­ப­கு­தி­யில் தூசு­மூட்­டம் இருந்த­தாக கிரைஸ்ட்­சர்ச் நகர மன்ற அதி­ கா­ரி­கள் கூறினர். ஐந்து ஆண்­டு­களுக்கு முன்பு கிட்­டத்­தட்ட இதே கால­கட்­டத்­தில் கிரைஸ்ட்­சர்ச் நகரில் ஏற்­பட்ட 6.3 ரிக்டர் அள­வி­லான நில­ந­டுக்­கத்­தில் 185 பேர் உயிரிழந்தது குறிப்­பி­டத்­தக்­கது. படம்: ராய்ட்டர்ஸ்