834 மாணவியருக்கு அன்பர் தின பூங்கொத்து அளித்த 17 வயது இளையர்

834 மாணவியருக்கு அன்பர் தின பூங்கொத்து அளித்த 17 வயது இளையர்

1 mins read
288f274a-d1ad-4c69-8c5b-3ddd74ceca4e
-

ஸ்மித்ஃபீல்ட்: 18 மாதங் களாகச் சேமித்த பணத்தைக் கொண்டு தமது பள்ளியில் பயிலும் அனைத்து மாணவி யருக்கும் அன்பர் தினத்தை முன்னிட்டு பூக்களைப் பரிசளித்து பள்ளி முதல்வரை யும் பெற்றோரையும் மகிழ்ச்சி யில் ஆழ்த்தியுள்ளார் ஹெய்டன் காட்ஃப்ரே, 17. அதற்கான மொத்தச் செலவு $630. உனவகங்களில் சமையல் வேலை, பாத்திரம் கழுவும் வேலை செய்து இந்தப் பணத்தை அவர் சம்பாதித்தார். இத்தகவலைத் தெரிவித்த அவரது 'ஃபேஸ்புக்' பதிவு 5,000 தடவை பகிரப்பட்டது. அன்பர் தினத்தன்று பரிசு ஏதும் பெறாத பெண்கள் வருத்தம் அடைவதைத் தாங்க முடியாமல் காட்ஃப்ரே இவ்வாறு செய்ததாக அவரது தாயார் கூறியுள்ளார்.

காதலியுடன் ஹெய்டன் காட்ஃப்ரே. படம்: அவரது 'ஃபேஸ்புக்' பக்கம்