ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவு

ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவு

1 mins read
a31f2be4-d24b-4a5b-9149-8e0171261251
-

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் சான் பெர்னாடினோவில் கைவரிசைக் காட்டிய துப்பாக்கிக்காரன் சையது ரிட்ஸ்வான் பாரூக்கின் ஐபோனில் பதிந்துள்ள தகவல்களைப் பெற முயலும் அமெரிக்க வேவுத்துறை அதிகாரிகளுக்கு உதவும்படி பிரபல ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள அந்த நகரில் சென்ற டிசம் பரில் பாரூக்கும் அவரின் மனைவியும் சேர்ந்து 14 பேரை சுட்டுக்கொன்றனர்.

பிறகு அவ்விருவரும் போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மாண் டனர். பாரூக்கின் ஐபோனில் ரகசியத் தகவல்கள் இருப்பதாக அமெரிக்க வேவுத் துறை தெரிவிக்கிறது. இதனால் அத்தகவல்களைப் பெறுவதில் உதவும்படி ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒரு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதனை ஆப்பிள் நிறுவனம் எதிர்க்கும் என்று கூறப்படுகிறது.