ஹாங்காங்: கூடுதல் தன்னாட்சி அதிகாரங்களை வேண்டும் இளம் மாணவர் குழு ஒன்று ஹாங்காங்கில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி இவ்வாண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் ஹாங்காங்கின் பல மாவட்டங்களில் குடியரசுச் சீரமைப்பு வேண்டி பிரசாரத்தை நடத்திய 'ஸ்காலரிசம்' எனும் குழுவின் தலைவர் திரு ஜோஷுவா வோங், "எங்களது எதிர்காலத்தை நாங்களே வடிவமைக்க விரும்புகிறோம்," என் றார். சீனாவின் ஆளுகையின்கீழ் தொடர்ந்து இருப்பதா என்பது குறித்து 2047ஆம் ஆண்டில் ஹாங்காங் மக்கள் தீர்மானம் எடுப்பதை தங்கள் கட்சி வலி யுறுத்தும் என்று அவர் சொன்னார்.
புதிய கட்சி தொடங்கிய ஹாங்காங் மாணவர்கள்
1 mins read
-

