அங்காரா குண்டுவெடிப்பில் சிரிய அமைப்பு கைவரிசை

அங்காரா குண்டுவெடிப்பில் சிரிய அமைப்பு கைவரிசை

1 mins read
0bfa9c89-fd20-4c8a-93f2-3a0877b30c6c
-

இஸ்­தான்­புல்: துருக்­கி­யின் தலை­ந­கர் அங்கா­ரா­வில் ராணுவப் பேருந்­துக்கு அருகில் நிகழ்த்­தப்­பட்ட கார்குண்­டுத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்ட இடத்­தி­லி­ருந்து சேக­ரிக்­கப்­பட்ட கைரேகை­களி­ல் இருந்து அந்தத் தாக்­கு­தலைச் சிரிய நாட்­ட­வர் மேற்­கொண்டது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந் தத் தகவலை அர­சுக்­குச் சார்பான யேனி சஃபாக் நாளிதழ் நேற்றுத் தெரி­வித்­தது. நேற்று முன்­தி­னம் நிகழ்ந்த இந்தத் தாக்­கு­த­லில் 28 பேர் பலி­யா­கி­னர். 61 பேர் காய­முற்­ற­னர். இந்த வெடி­குண்­டுச் சம்ப­வத்­துக்கு இதுவரை யாரும் பொறுப்­பேற்­க­வில்லை. சலி நெகார் எனும் அந்த நபர் சிரிய அக­தி­களு­டன் சேர்ந்து துருக்­கிக்­குள் நுழைந்தது அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது. துருக்­கிய நாடா­ளு­மன்றம், ராணுவத் தலைமை­ய­கம், பிற அர­சாங்கக் கட்­ட­டங்கள் ஆகி­ய ­வற்­றுக்கு அருகே நிகழ்த்­தப்­பட்ட குண்­டு­வெ­டிப்­பில் பயன்­படுத்­தப்­பட்ட கார், மேற்கு துருக்­கிய நகரான இஸ்­மி­ரில் இரு வாரங்களுக்கு முன்பாக வாடகைக்கு எடுக்­கப்­பட்­ட­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

துருக்கிய நாடாளுமன்றத்துக்கு வெளியே ராணுவப் பேருந்துக்கு அருகில் நடத்தப்பட்ட கார்குண்டுத் தாக்குதலினால் கொழுந்துவிட்டெறிந்த தீயை அணைக்கப் போராடும் வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்