டோங்காவில் சூறாவளி; ஸிக்கா பரவும் அபாயம்

டோங்காவில் சூறாவளி; ஸிக்கா பரவும் அபாயம்

1 mins read
97923a9d-9fd2-47aa-8def-d0deef7c031e
-

சிட்னி: தென்­ப­சி­பிக் தீவான டோங்கா­வில் மீண்டும் வின்ஸ்டன் சூறாவளி ஏற்­ப­டக்கூடிய வாய்ப்பு இருப்­ப­தால் ஸிக்கா வைரஸ் பர­வும் அபாயம் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக, அதற்­கான கடைசி நேர தற்காப்பு ஆயத்­தங்களைச் செய்­து ­வ­ரு­கின்ற­னர் உதவிப்பணி­யா­ளர்­கள். இந்த வாரத் தொடக்­கத்­தில் தீவின் வடக்­குப் பகு­தியைத் தாக்கிய வின்ஸ்டன் சூறாவளி மோசமான பாதிப்­பு­களை ஏற்­படுத்­தக்­கூடும் என அவர்­கள் அச்சம் தெரி­வித்­த­னர்.

புய­லுக்­குப் பின்னால் கன மழை ஏற்­படுத்­தும் தாக்­கங்களும் மோசமாக இருக்­கும் என அவர்­கள் அஞ்­சு­கின்ற­னர். டோங்கா­வில் ஸிக்கா கிருமியால் ஐவர் தாக்­கப்­பட்­டது உறு­திப்­படுத்­தப்­பட்­டது. மேலும் 259 பேர் ஸிக்காவால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் எனக் கூறப்­பட்­டது. கொசுக்­களை ஒழிக்­கும் நட­ வ­டிக்கை­களை உதவிப்பணி ­யா­ளர்­கள் துரிதகதியில் முடுக்­கி­விட்­டுள்­ள­னர்.