தாய்லாந்து விமான நிலையத்தில் நெரிசலால் பாதுகாப்பு ஆபத்து

தாய்லாந்து விமான நிலையத்தில் நெரிசலால் பாதுகாப்பு ஆபத்து

1 mins read
712c63ad-21d8-4438-884e-565a6b3c85e4
-

பேங்காக்: பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் நெரிசல் அதிகமாக இருப்பது கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் எனவும் அதனை விரைந்து விரிவுபடுத்துவது அவசியம் எனவும் அனைத்துலக விமானப் போக்குவரத்துக் கழகம் (ஐஏடிஏ) எச்சரித்திருப்பதாக நேசன் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தாய்லாந்து விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புத் தரக் குறியீட்டைக் குறைத்தது.

மேலும் விமான நிலையத்தின் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் தரம் குறைவாக இருப்பதால் விமானங்கள் அவ்விடங்களில் சிக்கி நின்றுவிடுவதாகவும் ஐஏடிஏவின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். ஓடுபாதையின் தரத்தை மேம்படுத்தவும் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்குமான பல நடவடிக்கைகள் தயாராக இருப்பதாகவும் அரசின் ஒப்புதலுக்காக அவை காத்திருப்பதாகவும் தாய்லாந்து விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.