சீனாவின் எச்சரிக்கையை நிராகரித்தது தென்கொரியா

சீனாவின் எச்சரிக்கையை நிராகரித்தது தென்கொரியா

1 mins read
7413815d-8d05-4dcd-a6db-5059edbd86ad
-
Google News Preferred Icon

சோல்: தென்கொரியாவில் ஏவுகணை தற்காப்பு சாதனத்தை நிறுவும் திட்டம் குறித்து அமெரிக்காவும் தென்கொரியாவும் அறிவித்தது முதல் அத்திட்டத்திற்கு வடகொரியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இத்திட்டம் தென்கொரியாவுடனான உறவுகளைப் பாதிக்கும் என்று வடகொரியா எச்சரித்துள்ள நிலையில் அந்த எச்சரிக்கையை தென்கொரியா நிராகரித்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணை மிரட்டலுக்கு எதிராக தங்கள் நாட்டை தற்காத்துக் கொள்வதற்கான திட்டம் அது என்று தென்கொரிய அதிபரின் பேச்சாளர் ஜியோங் யுனோன் தெரிவித்துள்ளார். வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை மேற்கொண்டது. முன்னதாக மூன்று அணு ஆயுத சோதனைகளை அந்நாடு மேற்கொண்டது. இதனால் வடகொரியா மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.