சரவாக் மக்களிடம் பிரதமர் நஜிப்: புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள்

சரவாக் மக்களிடம் பிரதமர் நஜிப்: புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள்

1 mins read
66a5050a-f23f-4c04-a234-ff19f8f3b3fd
-

சரடோக்: வருகின்ற மாநிலத் தேர்தலில் முதல்வர் அடெனான் சாடெமுக்கு வலுவான வெற்றியை வழங்க வேண்டும் என்று சரவாக் மக்களை பிரதமர் நஜிப் நேற்று கேட்டுக் கொண்டார். இந்த வலுவான வெற்றியின் மூலம் மாநிலத்தில் அரசியல் நிலைத்தன்னைக்கு உறுதி அளிக் கும் அரசாங்கத்தை திரு அடெ னான் அமைக்க முடியும். அப்போதுதான் தேவையான எந்தவொரு மேம்பாட்டுக்கும் மத் திய அரசுடன் அவரால் பேச்சு நடத்த முடியும் என்று பிரதமர் நஜிப் வலியுறுத்தினார். "தேர்தலில் வலுவான வெற்றி என்பது சரவாக் மக்களின் ஒட்டு மொத்த குரல். நாங்களும் அத் தகைய வெற்றிக்கு மதிப்பு அளிப் போம்," என்று நேற்று திட்டம் ஒன்றைத் தொடங்கி வைத்து பிரதமர் நஜிப் சொன்னார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் அடெனானும் அவரது துணை வியாரும் கலந்துகொண்டனர்.

சரவாக் மாநில முதல்வராக திரு அடெனான் இரண்டாவது ஆண்டைக் கொண்டாடுகிறார். அவர் தமது பதவிக் காலத்தில் மாநிலத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார். "மக்களுக்காக எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்து வதற்கு இரண்டு ஆண்டுகாலம் போதாது. சரவாக்கின் மேம் பாட்டுக்கு அவருக்கு மேலும் ஐந்து ஆண்டுகாலம் வாய்ப்பு வழங்க வேண்டும்," என்று திரு நஜிப் குறிப்பிட்டார்.

சரவாக் வந்த பிரதமர் நஜிப் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். படம்: மலேமெயில் ஆன்லைன்