உலகின் ஆக இளவயது செல்வந்தர்

உலகின் ஆக இளவயது செல்வந்தர்

1 mins read
04ee178c-2596-4993-a206-de58aecc265c
-

உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் நார்வேயைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் அலெக்சாண்ட்ரா ஆண்டர்சனும் இடம் பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் சஞ்சிகை உலகில் உள்ள ஆக செல்வந்தர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களை மார்ச் முதல் தேதி அறிவித்தது. அந்த வரிசையில் குமாரி அலெக்சாண்ட்ரா ஆண்டர்சன் ஆக இள வயது செல்வந்தராவார். இவரது சொத்தின் மதிப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்( S$1.68 பில்லியன்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

செல்வந்தர் பட்டியலில் இவரது சகோதரியான 20 வயது கத்ரினாவும் இடம் பெற்றுள்ளார். இந்த சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் 42.2 விழுக்காடு பங்கு உள்ளது. இதன் அடிப்படையிலேயே இவர்களின் சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. அலெக்சாண்ட்ராவுக்கு 17 வயது ஆகும் வரை அவரது சொத்து மதிப்பு பற்றி அவருக்கு தெரியாமல் இருந்ததாம். பள்ளிப் பருவம் முதல் சேமிக்கும் பழக்கம் தனக்கு உள்ளது என்று அவர் கூறுகிறார்.

அலெக்சாண்ட்ரா குதிரைப் பிரியர் ஆவார்.