தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'MH370 விமானம் கண்டுபிடிக்கப்படும்'

1 mins read
555ecd39-4426-4e04-ab74-f24546b9d7f1
-

கோலாலம்பூர்: மலேசியாவில் காணாமற்போன MH370 விமானத்தை கண்டுபிடித்துவிட முடியும் என்று இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கும் மலேசிய-=ஆஸ்திரேலிய புலன் விசாரணையாளர்களும் தெரிவித் துள்ளனர். 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மொத்தம் 239 பேருடன் புறப்பட்ட அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமாய் மறைந்தது. அந்த விமானம் காணாமற்போய் நேற்றுடன் ஈராண்டுகள் ஆகும் நிலையில் திரு நஜிப் வெளியிட்ட அறிக்கையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய மூன்று நாடுகளின் அதிகாரிகள் முத்தரப்பு கூட்டத்தில் முடிவு செய்வர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியா தலைமை யிலான மீட்புக் குழுவினர் இந்தியப் பெருங்கடல் பகுதியில் 120,000 சதுர கி.மீட்டரை உள் ளடக்கிய பகுதியில் விமானப் பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் தேடும் பணி வரும் ஜூன் மாதம் முடிவடையவிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரீயூனியன் தீவில் காணப்பட்ட விமானத்தின் இறக்கைப் பாகம் காணாமற்போன மலேசிய விமானத்தின் பாகமாக இருக் கலாம் என்று கருதப்படுகிறது.

மலேசிய விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் பெய்ஜிங்கில் உள்ள ஓர் ஆலயத்திற்கு வெளியே நேற்று ஒன்றுகூடினர். விமானத்தைத் தேடும் பணி தொடரவேண்டும் என்று அவர்கள் கூக்குரல் எழுப்பினர். படம்: ஏஎஃப்பி