வடகொரியா மீது புதிய தடைகளை விதித்தது தென்கொரியா

வடகொரியா மீது புதிய தடைகளை விதித்தது தென்கொரியா

1 mins read
f97b2958-9935-4169-814f-e16b8b6ae16c
-

சோல்: வடகொரியாவுக்கு எதிராக புதிய தடைகளை தென்கொரியா நேற்று அறிவித்தது. வெளிநாடுகளில் உள்ள வடகொரிய உணவகங்களை தென்கொரிய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதும் அவற்றுள் அடங்கும். வெளிநாடுகளில் உள்ள வடகொரிய உணவகங்கள் மூலம் அந்நாட்டுக்கு அதிக வருமானம் கிடைப்பதாக தென்கொரியா கூறுகிறது. வடகொரியா அண்மையில் அணுவாயுத சோதனை மற்றும் நெடுந்தொலைவு ஏவுகணை சோதனையை மேற்கொண்டதைக் கண்டித்து புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐநா பாதுகாப்பு மன்றம் சென்ற வாரம் வடகொரியா மீது கடுமையான பொருளியல் தடைகளை விதித்தது.